உறுப்பினர் மற்றும் முதன்மை திட்ட அமைப்பாளர் திரு C. பழனிவேலு அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு 29.02.2012 அன்று முதன்மை திட்ட அமைப்பாளர் திருமதி C. சித்ரா அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்
நியுயார்க் போக்குவரத்துத்துறை ஆணையர் செல்வி. ஜானட் சாதிக்கன் அவர்கள் மற்றும் நியுயார்க் திட்டத்துறை ஆணையர் செல்வி. அமந்தா பர்டென் அவர்கள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 21.02.2012 அன்று வருகை புரிந்தனர்
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக் குழுமக் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 09.02.2012 அன்று நடைபெற்றது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.R. வெங்கடேசன் I.A.S அவர்கள் 63வது குடியரசு தினத்தன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ர.வைத்தியலிங்கம் அவர்கள் தலைமையில் சென்னை பெருநகரத்திற்கான போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவின் கூட்டம் 11.01.2012 அன்று நடைபெற்றது
மூன்றாம் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்ய உலக வங்கிக் குழு 05.08.2011 அன்று வருகை
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமாகிய மாண்புமிகு அமைச்சர் திரு.ர.வைத்திலிங்கம் அவர்கள் 20.05.2011 அன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வருகை புரிந்தார்.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 22.2.2011 அன்று பயிற்சி துணை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருகை.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.தயானந்த் கட்டாரியா அவர்கள் 62வது குடியரசு தினத்தன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
உலக வங்கியின் இந்திய தலைவர் அரும்பாக்கம் தன்னிறைவு வீட்டுமனைத் திட்டத்திற்க்கு 14.12.2010 அன்று வருகை.
கூவம் நதி சீரமைப்பு மற்றும் மேலாண்மை குறித்து திட்டமிடும் சிங்கப்பூர் பிரதிநிதிகள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், 15.7.2010 அன்று கலந்துரையாடினர்.