புதியது
 |   | 

சென்னைப் பெருநகர்ப் பகுதி - குறிப்பு

CMA Map

வரைபடம் பெரிதாக்க
இங்கு சொடுக்கவும்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமாகும்.

விரிவாக்கப்பட்ட சென்னைப் பெருநகரப் பகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், 1 சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் 22 ஊராட்சி ஒன்றியங்கள் (1321 கிராமங்களை உள்ளடக்கியது) அமைந்துள்ளன. சென்னைப் பெருநகரப் பகுதியின் தற்போதைய பரப்பளவு 5904 ச.கி.மீ. ( சென்னையின் அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது)

விரிவாக்கப்பட்ட சென்னைப் பெருநகரப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளையும், இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.

சென்னைப் பெருநகரப் பகுதி பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களையும் சேர்த்து (179 கிராமங்களை உள்ளடக்கியது) சென்னை மாவட்டம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் அடங்கிய 1189 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருந்தது. அக்டோபர் 2022-ல், கூடுதலாக 1225 கிராமங்களை உள்ளடக்கி சென்னைப் பெருநகர திட்டப் பகுதியுடன் இணைத்து சென்னைப் பெருநகரப் பகுதி விரிவாக்கப்பட்டது.

முந்தைய சென்னைப் பெருநகரப் பகுதி மற்றும் விரிவாக்கப்பட்ட சென்னைப் பெருநகரப் பகுதி ஆகியவற்றில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


பயன்பாடுகள்

முக்கிய செய்திகள்

நிகழ்வு