நிகழ்வுகள்

23.02.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்களும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களும் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்

CMDA Fund To Forest Department

கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய செயல்பாடுகள் தொடர்பாகவும், பேருந்துகளின் இயக்கம் தொடர்பாகவும் முதல் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் (1st Steering Committee Meeting) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 14.02.2024 அன்று நடைபெற்றது

1st Steering Commiittee Meeting KCBT

கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கம் குறித்தும், இம்முனையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்தும் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவர் (ம) இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் 11.02.2024 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்

Minister Field Inspection on 11-02-2024

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 12 உதவி பொறியாளர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவர் அவர்கள் 11.02.2024 அன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்

AE Appointment on 11-02-2024

06.02.2024 அன்று பெருநகர சென்னை காவல் இணை ஆணையர் (மேற்கு) டாக்டர் பொ.விஜய குமார், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக வியாபாரிகளுடளான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

KWMC Traders Meeting on 06-02-2024

06.02.2024 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அரசு போக்குவரத்துக் கழக (SETC & TNSTC) பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டு என்னும் தலைப்பில் பேருந்து முனையத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கான மூன்று நாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது

KCBT Training Session on 06-02-2024

05.02.2024 அன்று கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்

Laying Foundation Stone for New Police Station at KCBT on 05-02-2024

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் 03.02.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Meeting with Omni Buses Association on 03-02-2024

28.01.2024 அன்று காலை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை நடைமேடைகளில் இறக்கி விட்ட பிறகு, பிரதான கட்டிடத்தில் எதிரே அமைக்கப்பட்டுள்ள இயக்கப்படாத பேருந்து நிறுத்திமிடத்தில் (Idle Parking for Omni Buses) 250-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நின்று கொண்டிருந்தன

Omni Bus Idle Parking at KCBT on 28-01-2024

27.01.2024 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய முதன்மை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பார்த்தீபன் அவர்களும், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.யுவராஜ் அவர்களும் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் திடீர் ஆய்வு மேற்க கொண்டனர். இந்த ஆய்வின்போது அனுமதியற்ற முறையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை விடுவித்தனர்.

Illegal omni bus tickets confiscation at KCBT on 27-01-2024

கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் அங்காடியில், கடந்த 2021 முதல் 2023 வரை லைசன்ஸ் புதுப்பிக்காத 14 கடைகளுக்கு 29.01.2024 அன்று சீல் வைக்கப்பட்டது

Lock And Seal on 29-01-2024

மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள துறை பிரிவுகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மற்றும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் குறித்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் 27.01.2024 அன்று நடைபெற்றது

Minister Review Meeting on 27-01-2024

சென்னை, யானைகவுனி, கல்யாணபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியை 27.01.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

Minister Inspection at Elephant Gate on 27-01-2024

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 75வது குடியரசு தினத்தன்று (26.01.2024) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்

75th Republic Day Celebration at C.M.D.A

"கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து" தென் மாவட்டங்களுக்கு SETC, TNSTC & MTC பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இம்முனையத்திலிருந்து முழுமையாக இயக்குவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் 23.01.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Minister Review Meeting regarding Kilambakkam Bus Stand on 23-01-2024

சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 277-ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 22.01.2024 அன்று நடைபெற்றது

277th Authority Meeting

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள “பொங்கல் சிறப்பு சந்தையை” மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 14.01.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்

Minister Koyambedu Wholesale Market Complex Inspection on 14-01-2024

"கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்" பயணிகள் சுலபமாக செல்வதற்காக வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கும் மாநகரப் பேருந்து நிலையத்திற்கும் (MTC) இடையில் 500 மீட்டர் நீளத்தில் மாற்று வழி பாதை அமைப்பது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 06.01.2024 அன்று நடைபெற்றது.

Minister Review Meeting regarding Kilambakkam Bus Terminus on 06-01-2024

கிளாம்பாக்கம், "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" 04.01.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, இம்முணையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக MTC மற்றும் SETC இடையே இணைப்புப் பாதை அமைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தியில் Wheel Chairs அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Minister Kilambakkam Bus Terminal Inspection on 04-01-2024

31.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலுள்ள நேரக் காப்பாளர் அறை, கண்காணிப்பு அறை, பேருந்துகளின் நடைமேடைகள் மற்றும் கழிவறை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

Minister Kilambakkam Bus Terminal Inspection on 31-12-2023

கிளாம்பாக்கம், “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து 26.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Minister Review Meeting regarding Kilambakkam Bus Stand on 26-12-2023

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் 25.12.2023 அன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

Kilambakkam Bus Terminus inspection on 25.12.2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 276வது குழும கூட்டம் 14.12.2023 அன்று நடைபெற்றது

276th Authority Meeting

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 09.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Cyclone Relief at Harbour Constituency on 09-12-2023

மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் 29.11.2023 அன்று நடைபெற்றது.

Review Meeting regarding Kilambakkam Bus Stand

திருவொற்றியூர் டி.கே.பி மஹால் மற்றும் ஓட்டேரியில் 22.11.2023 அன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாமில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உதவி திட்ட அமைப்பாளர்கள் கொண்ட குழு மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து பொதுமக்கள் இணையவழி மூலம் பதிவு செய்யப்பட்ட மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர்.

Makkaludan Mudhalvar Camp on 22-11-2023

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை மற்றும் பிற இணையவழி சேவைகளை 17.11.2023 அன்று மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Online Services Inauguration on 17-11-2023

சென்னை, நம்மாழ்வார்பேடை, அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை இளைஞர்களின் திறன் பயிற்சிக்காகவும் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் “திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்” அமைப்பது தொடர்பாக மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 04.11.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

Minister inspection of Govt Polytechnic College on 04-11-2023

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 02.11.2023 அன்று சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை ஆய்வு செய்தார்.

Minister inspection of Koyambedu Wholesale Market Complex on 02-11-2023

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய பேருந்து முனையத்தில் 31.10.2023 அன்று மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Minister Review Meeting at Kilambakkam Bus Stand on 31-10-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வணிக வளாக உரிமையாளர்களுடன் (Mall Owners) ஆலோசனைக் கூட்டம் 25.10.2023 அன்று நடைபெற்றது.

Mall Owners Meeting - 25-10-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.05 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 19.10.2023 அன்று வழங்கினர்.

CMDA Fund To ChennaiCorporation - 19-10-2023

சென்னைப் பெருநகர பகுதிக்கான மூன்றாம் முழுமைத் திட்ட தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்காக அரசு துறை உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறுவதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 18.10.2023 அன்று நடைபெற்றது.

Third Master Plan - Seminar - 18-10-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 275வது குழும கூட்டம் 16.10.2023 அன்று நடைபெற்றது.

275th Authority Meeting

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைமை அலுவலகத்தில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள (Tower - III) அடுக்குமாடி அலுவலக வளாகத்திற்கு Indian Green Building Council (IGBC)-யின் கோல்ட் தர சான்று வழங்கும் விழா 12.10.2023 அன்று நடைபெற்றது.

Gold Standard Certificate of Indian Green Building Council (IGBC)

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 28.09.2023 அன்று கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

Minister Kilambakkam Bus Terminal Inspection on 28-09-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வடசென்னை தொடர்பான ஆய்வுக் கூட்டம் 26.09.2023 அன்று நடைபெற்றது.

Review Meeting regarding Kilambakkam Bus Stand and North Chennai

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 77வது சுதந்திர தினத்தன்று (15.08.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

77th Independence Day Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 26.07.2023 அன்று நடைபெற்றது.

Review Meeting regarding Kilambakkam Bus Stand

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 274வது குழும கூட்டம் 24.07.2023 அன்று நடைபெற்றது.

274th Authority Meeting

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிதிநிலை அறிக்கை 2023-2024 குறித்து கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் திட்ட வடிவமைப்பாளர்களுடன் 12.07.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Review Meeting with Architects & Planning Designers
      regarding Budget Announcements

மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 12.07.2023 அன்று சென்னைத் தீவுத்திடலில் நவீன நகர்ப்புர வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

Ministers Inspection at Island Grounds

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 10.07.2023 அன்று நடைபெற்றது.

Review Meeting regarding Kilambakkam Bus Stand

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 03.07.2023 அன்று பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து திட்ட வடிவமைப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Review Meeting with Planning Designers
        regarding Budget Announcements

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 03.07.2023 அன்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய இடத்தில் ஆய்வு செய்தார்.

Ministers Inspection at Chengalpet New Bus Stand Site

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 30.06.2023 அன்று மாமல்லபுரம் புதிய பேருந்து நிலைய இடத்தில் ஆய்வு செய்தார்.

Ministers Inspection at Mamallapuram New Bus Stand Site

திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள், மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 28.06.2023 அன்று நடைபெற்றது.

Minister Review Meeting regarding Open Space Reservation Sites, Madhavaram and Kilambakkam Bus Stands and Budget Announcements

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 17.06.2023 அன்று அண்ணா சாலை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ஆய்வு செய்தனர்.

Ministers Inspection at Chintadripet

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 15.06.2023 அன்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

Grievances Meeting

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 13.06.2023 அன்று கோட்டூரில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Kottur

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 09.06.2023 அன்று நடைபெற்றது.

Minister Review Meeting regarding Kilambakkam Bus Stand

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 07.06.2023 அன்று கட்டிடக்கலை கல்லூரி முதல்வர்களுடன் கூட்டம் நடைபெற்றது.

Architect College Principals Meeting

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 07.06.2023 அன்று சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் கூட்டம் நடைபெற்றது.

Social Media Influencers Meeting

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 26.05.2023 அன்று கோணம்பேடு, கரையான்சாவடி மற்றும் ராமாபுரத்தில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Konambedu

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 22.05.2023 அன்று தாம்பரம், முடிச்சூர், பம்மல் மற்றும் ஆலந்தூரில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Mudichur

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 20.05.2023 அன்று பெரும்பாக்கம் புதிய பூங்கா மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Perumbakkam New Park

தலைமைச் செயலகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 19.05.2023 அன்று நடைபெற்றது.

Kilambakkam Bus Stand Review Meeting

மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரம் சென்னைப் புறநகர் பேருந்து நிலையம், பிவிஆர் சினிமாஸ் - விஆர் மால், சத்யம் சினிமாஸ், அம்பா ஸ்கை வாக் மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 18.05.2023 அன்று நடைபெற்றது.

Third Master Plan Survey Campaign at CMBT

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 15.05.2023 அன்று கேளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Kilambakkam Bus Stand

தீவுத்திடலில் மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரம் 13.05.2023 அன்று நடைபெற்றது.

Third Master Plan Survey Campaign at Island Ground

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 11.05.2023 அன்று கோயம்பேடு, தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Koayambedu

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 273வது குழும கூட்டம் 10.05.2023 அன்று நடைபெற்றது.

273rd Authority Meeting

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 09.05.2023 அன்று அண்ணா நகர், ஷெனாய் நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Anna Nagar

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான போக்குவரத்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் 08.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Minister Review Meeting with Transport Officials regarding Kilambakkam Bus Stand

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 08.05.2023 அன்று கொளத்தூர், புழல், எண்ணூர் மற்றும் திருவொற்றியூரில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at Kolathur

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 04.05.2023 அன்று பி.ஆர்.என் கார்டன், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கான்ரன் ஸ்மித் சாலை சலவைக் கூடம் மற்றும் சேத்துப்பட்டு சலவை கூடத்தில் ஆய்வு செய்தார்.

Minister Inspection at B.R.N. Garden on 04.05.2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தீவுத்திடல் மேம்பாடு தொடர்பான கூட்டம் 03.05.2023 அன்று நடைபெற்றது.

Island Ground Development Meeting held at CMDA on 03.05.2023

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 02.05.2023 அன்று மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்தார்.

Minister Field Inspection at Ambattur Estate Bus Depot on 02-05-2023

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 29.04.2023 அன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்தார்.

Minister inspected Kilambakkam Bus Terminal on 29.04.2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 28.04.2023 அன்று பட்ஜெட் அறிவிப்புகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Budget Announcements Review Meeting on 28-04-2023

27-04-2023 அன்று சென்ட்ரல், எழும்பூர் மற்றும் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரம் நடைபெற்றது

Third Master Plan Survey Campaign at Central Metro on 27-04-2023

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 25.04.2023 அன்று வடசென்னையில் ஆய்வு செய்தார்.

Minister North Chennai Inspection on 25-04-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 24.04.2023 அன்று பட்ஜெட் அறிவிப்புகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Budget Announcements Review Meeting on 24-04-2023

பீனிக்ஸ் மாலில் 18.04.2023 அன்று நடைபெற்ற மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.

Third Master Plan Survey Campaign on 18-04-2023

வீ.ஆர் மாலில் 17.04.2023 அன்று நடைபெற்ற மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.

Third Master Plan Survey Campaign on 17-04-2023

09-04-2023 அன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரத்தில் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்.

Third Master Plan Survey Campaign

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 07.04.2023 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Third Master Plan Survey Campaign on 18-04-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 06.04.2023 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Minister Review Meeting on 06-04-2023

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் 02.04.2023 அன்று நடைபெற்ற மூன்றாவது முழுமைத் திட்ட கருத்துக்கேட்பு பிரச்சாரத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

Third Master Plan Survey Campaign

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 272வது குழும கூட்டம் 30.03.2023 அன்று நடைபெற்றது.

272nd Authority Meeting

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 28.03.2023 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Minister Review Meeting on 28-03-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை 2023-24 ஆய்வு கூட்டம் 22.03.2023 அன்று நடைபெற்றது.

Minister Review Meeting on 28-03-2023

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 74வது குடியரசு தினத்தன்று (26.01.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

74th Republic Day function at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 76வது சுதந்திர தினத்தன்று (15.08.2022) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

76th Independence Day Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 73வது குடியரசு தினத்தன்று (26.01.2022) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

73rd Republic Day function at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி. M.லட்சுமி இ.ஆ.ப அவர்கள் 75வது சுதந்திர தினத்தன்று (15.08.2021) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

75th Independence Day Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு இ.ஆ.ப அவர்கள் 72வது குடியரசு தினத்தன்று (26.01.2021) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 29.01.2021 அன்று 2021 தியாகிகள் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Martyrs' Day 2021 Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 25.01.2021 அன்று 2021 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

National Voters Day 2021 Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் Dr.D.கார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள் 74வது சுதந்திர தினத்தன்று (15.08.2020) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

74th Independence Day Celebration at C.M.D.A

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் Dr.D.கார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள் 71வது குடியரசு தினத்தன்று (26.01.2020) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் Dr.D.கார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள் 73வது சுதந்திர தினத்தன்று (15.08.2019) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராஜேஸ் லக்கானி இ.ஆ.ப அவர்கள் 70வது குடியரசு தினத்தன்று (26.01.2019) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராஜேஸ் லக்கானி இ.ஆ.ப அவர்கள் 72வது சுதந்திர தினத்தன்று (15.08.2018) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்

மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் மாதவரம் உள்நகர பேருந்து முனைய தளத்திற்கு 02.04.2018 அன்று வருகை புரிந்தார்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. C. விஜயராஜ் குமார் இ.ஆ.ப அவர்கள் 69வது குடியரசு தினத்தன்று (26.01.2018) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 27.11.2017 அன்று ஆய்வு செய்தார்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. M. மதிவாணன் இ.ஆ.ப அவர்கள் 71வது சுதந்திர தினத்தன்று (15.08.2017) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்

மாதவரம் உள்நகர பேருந்து முனைய தளத்திற்கு மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் குழுமத் தலைவர் 20.12.2016 அன்று வருகை புரிந்தார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களின் நிலை குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் குழுமத் தலைவர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் 09.09.2016 அன்று நடைபெற்றது

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. M. மதிவாணன் இ.ஆ.ப அவர்கள் 70வது சுதந்திர தினத்தன்று (15.08.2016) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களின் நிலை குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் குழுமத் தலைவர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. A. கார்த்திக் இ.ஆ.ப அவர்கள் 67வது குடியரசு தினத்தன்று (26.01.2016) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.